ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியினை வெற்றி பெற்றுவது ஏழாவது தடவையாக ஆசிய கிண்ணத்தை வெற்றி பெற்றது இந்தியா அணி. 20-20 போட்டிகளாக நடைபெறும் தொடர்களில் மூன்றாவது தடவையாக வெற்றி பெற்றுள்ளது.
நான்காவது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை அணி இம்முறையும் கிண்ணம் பெறும் வாய்ப்பை இழந்தது.
பங்காளதேஷில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை 65 ஓட்டங்களை பெற்றது. இனோகா ரணவீர ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களையும், ஒஷாதி ரணசிங்க 13 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரேணுகா சிங் 3 விக்கெட்களையும், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஸ்னே ராணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இலங்கை அணியின் ஆரமப வீராங்கனைகள் இருவரும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தது இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 8.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 71 ஓட்டங்களை பெற்றது. இதில் ஸ்மிரிதி மந்தனா ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி, இனோக்கா ரணவீர ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினாரகள்.
இந்தியா அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நாயகியாக ரேணுகா சிங் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த தொடரின் நாயகியாக தீப்தி ஷர்மா தெரிவு செய்யப்பட்டார்.