இரண்டு தடவை உலக கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி ICC T 20 உலக கிண்ண தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறுமணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும், தோல்வியடையும் அணி வெளியேறும் என்ற நிலையில் அயர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
அயர்லாந்து அணியின் கரித் டெலானியின் பந்து வீச்சு மற்றும் அயர்லாந்து அணியின் மூன்று துடுப்பாட்ட வீரர்களது துடுப்பாட்டம் மூலம் இலகுவான வெற்றியினை தனாக்கியது.
முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றது. இதில் ப்ரெண்டன் கிங் 62 ஓட்டங்களையும், ஜோன்சன் சார்லஸ் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கரித் டெலானி 03 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்த்து அணி 17.3 ஓவர்களில் 01 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 150 ஓட்டங்களை பெற்றது. இதில் போல் ஸ்டெர்லிங் 65 ஓட்டங்களையும், லோகன் ரக்கர் 45 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். அன்டி பில்ப்ரைன் 37 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
இந்த வெற்றியின் மூலம் அயலாந்து அணி முதலிடத்தை பெறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. முதல் போட்டியில் சிம்பாவே அணியுடன் தோல்வியடைந்த அயர்லாந்து அணி ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியினை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. அடுத்த நடைபெறவுள்ள ஸ்கொட்லாந்து மற்றும் சிம்பாவே அணிகளுடனான போட்டியில் இரண்டாவது அணி தெரிவாகவும். அந்த போட்டியிலேயே குழு B இன் முதலிடமும் தங்கியுள்ளது.