இலங்கை அணி ஆஷி அணிக்கு வெற்றியினை வழங்கியது!

ICC T20 உலக கிண்ண தொடரின் இலங்கை அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை பக்கமாக காணப்பட்ட வெற்றி வாய்ப்பை அவுஸ்திரேலியா அணி பறித்து எடுத்துக் கொண்டது. இலங்கை அணி பந்துவீச்சின் ஆரம்பத்தில் வழங்கிய அழுத்தத்தை கைவிட்டமை, அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஆரோன் பிஞ்சின் பிடிகள் நழுவவிடப்பட்டமை ஆகியன இலங்கை அணியின் தோல்விகளுக்கு முக்கியமான காரணமாக அமைந்தன.

முதல் ஓவரிலேயே பினுர பெர்னாண்டோ உபாதையடைந்து வெளியேறியமை இலங்கை அணிக்கு பாதகமாக அமைந்தது. வேகப்பந்து வீச்சு சிறப்பாக அமையும் வேளையில் தஸூன் சாணக்க பந்துவீச்சை பாவிக்காமை ஆகியன இலங்கை அணியின் பந்துவீச்சில் பாரிய பின்னடைவை வழங்கின. வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சு மிக மோசமாக அடித்து தாக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் வைத்து டேவிட் வோர்னர் கிட்டத்தட்ட 10 வருடங்களின் பின்னர் இலங்கை அணியினால் ஆட்டமிழப்பு செய்யப்பட்டார். தடுமாறி வாய்ப்புகளை வழங்கிய ஆரோன் பிஞ்ச் ஆடுகளத்தில் நின்று பிடித்து
கொடுக்க மறு புறத்தில் மக்ஸ்வெல், மார்கஸ் ஸ்ரொய்னிஸ் ஆகியோர் இலங்கை அணியினை பதம் பார்த்தனர்.

நல்ல முறையில் ஆரம்பித்து பின்னர் சொதப்புவது இலங்கை அணிக்கு இதுவொன்றும் புதிதல்ல. அவுஸ்திரேலியா அணி கடந்த தோல்வியிலிருந்து மீள அதிரடியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது போல அடித்தாடி இழந்த ஓட்ட நிகர சராசரி வேகத்தை ஓரளவு ஈடு செய்துள்ளனர். இனி அவுஸ்திரேலியாவின் இந்த அதிரடி தொடருமென நம்பலாம்.

இலங்கை அணி மீள் வருகை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அடுத்த போட்டி இலங்கை அணிக்கு நியூசிலாந்துடன் எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அவுஸ்திரேலியாவுடன் வெற்றி பெற்று அழுத்தங்களின்றி களமிறங்கவுள்ள நியூசிலாந்து அணியினை எதிர்கொண்டு வெற்றி பெறுவது இலங்கை அணிக்கு இலகுவானதல்ல.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றது.

குஷல் மென்டிஸ் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்த போதும், பத்தும் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா ஆகியோர் இணைந்து நிதானமான ஆரம்பம் ஒன்றை வழங்கினார்கள். 69 ஓட்டங்களை இணைப்பாட்டமாக இருவரும் பகிர்ந்தனர். கைகளுக்குள் அடித்து விட்டு ஓட்டம் ஒன்றை பெற எத்தனித்த வேளையில் பத்தும் நிஸ்ஸங்க ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

போர்முக்கு திரும்பியுள்ள சரித் அசலங்க அதிரடி துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தினார்.

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் மிகவும் அபாரமாக பந்து வீசினார்கள். அச்சுறுத்தும் விதமாக வீசிய பந்துவீச்சுகளை நிதானமாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் எதிர்கொண்டமையினாலேயே இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற முடிந்தது.

அதிரடியாயாக அடித்தாடும் இலங்கை அணியின் மத்திய வரிசை கிடைத்த ஆரம்பத்தை சரியாக பாவிக்காமையினால் ஓட்ட எண்ணிக்கையினை அதிகரிக்க முடியாமல் போனது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆட்டமிழந்தமை பின்னடைவினை ஏற்படுத்தியது.

ஏழாவது விக்கெட் இணைப்பாட்டமாக 37 ஓட்டங்களை 15 பந்துகளில் சாமிக்க கருணாரட்டன மற்றும் சரித் அசலங்க ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
டேவிட் வோர்னர்பிடி – தசுன் ஷானகமஹேஷ் தீக்ஷன111000
ஆரோன் பிஞ்ச்  314201
மிச்செல் மார்ஷ்பிடி – பானுக ராஜபக்சதனஞ்சய டி சில்வா181711
க்ளென் மக்ஸ்வெல்பிடி – அஷேன் பண்டாரசாமிக்க கருணாரட்ன231222
மார்கஸ் ஸ்டோனிஸ்  591846
ரிம் டேவிட்      
மத்தியூ வேட்      
பட் கமின்ஸ்      
மிட்செல் ஸ்டார்க்      
அடம் சம்பா      
ஜோஸ்ஹெசல்வூட்       
உதிரிகள்  16   
ஓவர்  16.3விக்கெட்  03மொத்தம்158   

பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
பினுர பெர்னாண்டோ0.5000500
தனஞ்சய டி சில்வா2.1001801
லஹிரு குமார 3.3002200
சாமிக்க கருணாரட்ன03002101
மஹீஷ் தீக்ஷன03002301
வனிந்து ஹசரங்க03005300
தஸூன்  ஷானக01001000

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
குசல் மென்டிஸ்பிடி -மிச்செல் மார்ஷ்,பட் கமின்ஸ்050610
பத்தும் நிஸ்ஸங்கRun Out 404520
தனஞ்சய டி சில்வாபிடி -டேவிட் வோர்னர்,அஸ்டன் ஏகர்  262330
சரித் அசலங்க  382532
பானுக ராஜபக்சபிடி – பட் கமின்ஸ்மிச்செல் ஸ்டார்க்070510
தஸூன்  ஷானகபிடி – மத்தியூ வேட்க்ளென் மக்ஸ்வெல்030500
வனிந்து ஹசரங்கபிடி – மத்தியூ வேட்ஜோஷ் ஹசல்வுட்010400
சாமிக்க கருணாரட்ன  140720
       
       
       
உதிரிகள்  13   
ஓவர்  20விக்கெட்  06மொத்தம்157   

பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஜோஷ் ஹசல்வுட்04002601
பட் கமின்ஸ்04003501
மிச்செல் ஸ்டார்க்04002301
அஸ்டன் ஏகர்04002501
மார்க்கஸ் ஸ்டொய்னிஸ்02001700
மிச்செல் மார்ஷ்01001400
க்ளென் மக்ஸ்வெல்01000701

Social Share

Leave a Reply