பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் அரசமைப்பதற்கான அழைப்பை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அவரது கென்சர்வேர்டிவி கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழரான சிவாஸ் எமது செய்திக்கு இந்த தகவலை இங்கிலாந்தில் இருந்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருளாதார சீர் தன்மையினை ஏற்படுத்தி ஒற்றுமையினை பலப்படுத்தி நாட்டை முன்னேற்றுவேன் எனவும், வெறும் வார்தைகளாலன்றி தினம் தினம் அதனை தனது வேலைத்திட்டங்கள் மூலமாக வெளிக்காட்டுவேன் எனவும் சுனக் மேலும் தனது கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த திட்டங்கள் உடனயடியாக ஆரம்பிக்கப்படுமெனவும், அதனை அனைத்து கட்சி உறுப்பினர்களது ஆதரவுடனேயே செயற்படுத்த முடியுமென மேலும் அவர் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு மக்கள் கென்சர்வேர்டிவ் கட்சிக்கு வழங்கிய ஆணையினை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். அதற்காக நாம் அனைவரும் இணைய வேண்டும். சிறந்த தேசிய சுகாதர சேவை, சிறந்த பாடசாலைகள், பாதுகாப்பான வீதிகள், எல்லை கட்டுப்பாடுகள், சூழல் பாதுகாப்பு, பாதுகாப்பு தரப்புகளுக்கான ஆதரவு என பல விடயங்களை செயற்படுத்த வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.