ICC T 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது. நியூசிலாந்து அணி அவுஸ்திரேலியா அணியினை வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் இன்று அவர்கள் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று தெரிவாக இலகுவாகிவிடும்.
இலங்கை அணி அவுஸ்திரேலியா அணியுடன் தோல்வியடைந்து, அயர்லாந்து அணியினை வெற்றி பெற்றுள்ள சூழ்நிலையில் இன்று வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்வது ஓரளவு இலகுபடுத்தப்படும். பலமான அணிகளை வெற்றி பெறுவதன் மூலமே அடுத்த சுற்று வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
கடந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கெதிராக பாரிய வெற்றியினை பெற்றுக்கொண்ட நியூசிலாந்து அணி அதே அணியோடு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமபலம் கொண்ட அணியாக அதிரடியா அடித்தாடக்கூடிய அணியாக தென்படுகிறது நியூசிலாந்து. இலங்கை அணியோடு ஒப்பிடும் போது மிகவும் பலமாக காணப்படுகிறது.
இலங்கை அணிக்கு ப்ரமோட் மதுஷான் இன்று மீண்டும் திரும்பும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. துடுப்பாட்ட வரிசை சீராக இலங்கை அணிக்கு காணப்படுகின்ற போதும் முழுமையான போர்ம் இன்றி காணப்படுவதே சிக்கலாக காணப்படுகிறது. குறிப்பாக பானுக்க ராஜபக்ஷ, தஸூன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க ஆகியோர் ஓட்டங்களை பெற முடியாமல் தடுமாறுவது சிக்கல் நிலையினை தோற்றுவித்துள்ளது இவர்கள் மூவருமே அதிரடி துடுப்பாட்டங்களை மேற்கொள்ளக்கூடியவர்கள்.
இன்று சிட்டினியில் மழைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே போட்டி முழுமையாக நடைபெறும்.
குழு 1
அணிகள் | வி. போ | வெற்றி | தோல்வி | கைவிடப்பட்ட போட்டிகள் | புள்ளிகள் | ஓ.ச.வே |
நியூசிலாந்து | 02 | 01 | 00 | 01 | 03 | 4.450 |
இலங்கை | 02 | 01 | 01 | 00 | 02 | 0.450 |
இங்கிலாந்து | 02 | 01 | 01 | 00 | 02 | 0.239 |
அயர்லாந்து | 02 | 01 | 01 | 00 | 02 | -1.169 |
அவுஸ்திரேலியா | 02 | 01 | 01 | 00 | 02 | -1.555 |
ஆப்கானிஸ்தான் | 02 | 00 | 01 | 01 | 00 | -0.620 |
குழு 2
அணிகள் | வி. போ | வெற்றி | தோல்வி | கைவிடப்பட்ட போட்டிகள் | புள்ளிகள் | ஓ.ச.வே |
இந்தியா | 02 | 02 | 00 | 00 | 04 | 1.425 |
தென்னாபிரிக்கா | 02 | 01 | 00 | 01 | 03 | 5.200 |
சிம்பாவே | 02 | 01 | 00 | 01 | 03 | -0.050 |
பங்களாதேஷ் | 02 | 01 | 01 | 00 | 02 | -2.375 |
பாகிஸ்தான் | 02 | 00 | 02 | 00 | 00 | -0.050 |
நெதர்லாந்து | 02 | 00 | 02 | 00 | 00 | -1.625 |