ICC T 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இன்று (29.10) சிட்னியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி மோசமான தோல்வியடைந்துள்ளது. இந்த தோல்வியின் மூலமாக இலங்கை அணிக்கு அடுத்த சுற்று கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதேவேளை நியூசிலாந்து அணிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இலங்கை அணி பந்துவீச்சை சிறப்பாக ஆரம்பித்த போதும், பின்னர் பந்துவீச்சு களத்தடுப்பு மோசமாக அமைய நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தில் மீள்வருகையினை ஏற்படுத்தி வலுவான நிலைக்கு சென்றது. 168 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடிப்பாடிய இலங்கை அணி மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆரம்பம் முதலே தொடர்ந்து விக்கெட்கள் வீழத்தப்பட்டன. நிதானமின்றி மோசமான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களை இழந்து 102 ஓட்டங்களை பெற்றது. பானுக ராஜபக்ஷ, தஸூன் ஷானக்க ஓரளவு ஓட்டங்களை பெற்ற போதும் அது வெற்றிக்கு ஏற்றளவில் கைகொடுக்கவில்லை.
இந்த ஓட்ட நிகர சராசரி அதிகரிப்பு நியூசிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை மேலும் இலகுபடுத்தியுள்ளது. அதுவே இலங்கை அணிக்கு சிக்கலான நிலையினை உருவாக்கியுள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்று கடினம் என்ற நிலையினை உருவாக்கியுள்ளது.
அடிப்படைகளை தவறவிட்டு விளையாடுவது, நுட்பகளின்றி விளையாடுவது போன்றன இலங்கைக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.
நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி 167 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
க்ளன் பிலிப்ஸ் பிடி நழுவவிடப்பட்ட பின்னர் சிறப்பாக துடுப்பாடி தனது முதல் சதத்தினை பூர்த்தி செய்தார்.
இலங்கை அணி நியூசிலாந்து அணியின் ஆரம்ப 3 விக்கெட்களை வேகமாக கைப்பற்றியமை நியூசிலாந்து அணியின் ஓட்டங்களை கட்டுப்படுத்த பெரிதும் உதவியது. இருப்பினும் நான்காவது விக்கெட்டையும் வேகமாக கைப்பற்றி அழுத்தம் வழங்க கூடிய வாய்ப்பை பத்தும் நிஸ்ஸங்க பிடியை நழுவ விட்டதன் மூலம் தவறவிட்டார். அத்தோடு களத்தடுப்பு கவலையீனங்கள் காரணமாக மேலும் ஓட்டங்கள் பல ஓடி பெறப்பட்டன.
விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் தொடர்ச்யாக பந்துவீசாமல் மாற்றப்பட்டமை பின்னடைவை ஏற்படுத்தியது.
க்ளன் பிலிப்ஸ், டரில் மிச்செல் இருவரும் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை மீட்டெடுத்தனர். 04 ஓவர்கள் 15 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்தே நியூசிலாந்து அணி மீண்டு வந்தது. இருவரும் 84 ஓட்டங்களை பகிர்ந்த வேளையில் ஹசரங்க இணைப்பாட்டத்தை முறியடித்தார். கடந்த போட்டியில் அதிகமாக ஓட்டங்களை வழங்கிய வனிந்து ஹஸரங்க இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசினார். இந்தப் போட்டிக்கு இலங்கை அணியில் சேர்க்கப்பட்ட கஷூன் ரஜித சிறப்பாக பந்துவீசி 02 விக்கெட்ளை கைப்பற்றினார்.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
பத்தும் நிஸ்ஸங்க | L.B.W | ரிம் சௌதீ | 00 | 05 | 0 | 0 |
குசல் மென்டிஸ் | பிடி – டெவோன் கொன்வேய் | ரென்ட் போல்ட் | 04 | 03 | 1 | 0 |
தனஞ்சய டி சில்வா | BOWELD | ரென்ட் போல்ட் | 00 | 03 | 0 | 0 |
சரித் அசலங்க | பிடி – பின் அலென் | ரென்ட் போல்ட் | 04 | 08 | 0 | 0 |
பானுக ராஜபக்ச | பிடி – கேன் வில்லியம்சன் | லூகி பெர்குசன் | 34 | 22 | 3 | 2 |
சாமிக்க கருணாரட்ன | பிடி – ரென்ட் போல்ட் | மிட்செல் சென்டனர் | 03 | 08 | 0 | 0 |
தஸூன் ஷானக | பிடி – டேரில் மிட்செல் | ரென்ட் போல்ட் | 35 | 32 | 4 | 1 |
வனிந்து ஹசரங்க | பிடி – கேன் வில்லியம்சன் | ஐஸ் சோதி | 04 | 06 | 1 | 0 |
மஹீஷ் தீக்ஷன | பிடி – ஜேம்ஸ் நிஷாம் | மிட்செல் சென்டனர் | 00 | 03 | 0 | 0 |
கசுன் ரஜித்த | 08 | 21 | 0 | 0 | ||
லஹிரு குமார | Stump | ஐஸ் சோதி | 04 | 05 | 1 | 0 |
உதிரிகள் | 05 | |||||
ஓவர் 19.2 | விக்கெட் 10 | மொத்தம் | 102 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ரிம் சௌதீ | 03 | 01 | 10 | 01 |
ரென்ட் போல்ட் | 04 | 00 | 13 | 04 |
லூகி பெர்குசன் | 04 | 00 | 35 | 01 |
மிட்செல் சென்டனர் | 04 | 00 | 21 | 02 |
ஐஸ் சோதி | 03.2 | 00 | 21 | 02 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
பின் அலென் | Boweld | மஹீஷ் தீக்ஷன | 01 | 03 | 0 | 0 |
டெவொன் கொன்வே | Boweld | தனஞ்சய டி சில்வா | 01 | 04 | 0 | 0 |
கேன் வில்லியம்சன் | பிடி – குசல் மென்டிஸ் | கசுன் ரஜித்த | 08 | 13 | 1 | 0 |
க்ளென் பிளிப்ஸ் | பிடி – தஸூன் ஷானக | லஹிரு குமார | 104 | 64 | 10 | 4 |
டேரில் மிட்செல் | Boweld | வனிந்து ஹசரங்க | 22 | 24 | 0 | 0 |
ஜேம்ஸ் நிஷாம் | பிடி – தஸூன் ஷானக | கசுன் ரஜித்த | 05 | 08 | 0 | 0 |
மிட்செல் சென்டனர் | 04 | 03 | 0 | 0 | ||
இஸ் சோதி | Run Out | 01 | 01 | 0 | 0 | |
ரிம் சௌதீ | 04 | 01 | 0 | 0 | ||
உதிரிகள் | 09 | |||||
ஓவர் 20 | விக்கெட் 7 | மொத்தம் | 167 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
மஹீஷ் தீக்ஷன | 04 | 00 | 38 | 01 |
கசுன் ரஜித்த | 04 | 00 | 23 | 02 |
தனஞ்சய டி சில்வா | 02 | 00 | 14 | 01 |
வனிந்து ஹசரங்க | 04 | 00 | 22 | 01 |
லஹிரு குமார | 03 | 00 | 37 | 01 |
சாமிக்க கருணாரட்ன | 03 | 00 | 34 | 00 |
குழு 1
அணிகள் | வி. போ | வெற்றி | தோல்வி | கைவிடப்பட்ட போட்டிகள் | புள்ளிகள் | ஓ.ச.வே |
நியூசிலாந்து | 03 | 02 | 00 | 01 | 05 | 4.450 |
இங்கிலாந்து | 03 | 01 | 01 | 01 | 03 | 0.239 |
அயர்லாந்து | 03 | 01 | 01 | 01 | 03 | -1.169 |
அவுஸ்திரேலியா | 03 | 01 | 01 | 01 | 03 | -1.555 |
இலங்கை | 03 | 01 | 02 | 00 | 02 | -0.890 |
ஆப்கானிஸ்தான் | 03 | 00 | 01 | 02 | 02 | -0.620 |
குழு 2
அணிகள் | வி. போ | வெற்றி | தோல்வி | கைவிடப்பட்ட போட்டிகள் | புள்ளிகள் | ஓ.ச.வே |
இந்தியா | 02 | 02 | 00 | 00 | 04 | 1.425 |
தென்னாபிரிக்கா | 02 | 01 | 00 | 01 | 03 | 5.200 |
சிம்பாவே | 02 | 01 | 00 | 01 | 03 | -0.050 |
பங்களாதேஷ் | 02 | 01 | 01 | 00 | 02 | -2.375 |
பாகிஸ்தான் | 02 | 00 | 02 | 00 | 00 | -0.050 |
நெதர்லாந்து | 02 | 00 | 02 | 00 | 00 | -1.625 |