சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதிஷு நகரத்தில் நேற்று(20.10) நடைபெற்ற குண்டு வெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஹசன் ஷேய்க் தெரிவித்துள்ளார்.
இரண்டு கார்களில் பொருத்தப்பட்ட குண்டுகள் வெடித்ததாகவும், கண் இமைப்பொழுதில் சம்பவம் நடந்த முடிந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பலர் கைகுழந்தைகளுடன் காணப்பட்ட தாய்மார் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். காயமடைந்த 300 இற்கும் அதிகமானவர்களுக்கு சிகிச்சையளிக்க சர்வதேசத்திடம் அவர் உதவி கோரியுள்ளதகா பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
சோமாலியாவின் கல்வியமைச்சை குறிவைத்து, அல் ஷபாப் அமைப்பு இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சோமாலிய அரசாங்கத்துக்கும் இஸ்லாமிய ஆயுத குழுவான அல் ஷபாப் அமைப்புக்கும் இடையில் நீண்ட காலமாக இழுபறி நிலை காணப்படுகிறது. இவ்வாறன நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் குறித்த அமைப்பினால் விடுதி ஒன்றில் நடாத்தப்பட்ட குண்டு தாக்குதலை தொடர்ந்து அவர்கள் மீது போர் தொடுப்பதாக ஜனாதிபதி ஹசன் ஷேய்க் அறிவித்திருந்தார்.