இலங்கை, ஆப்கானிஸ்தான் போட்டி

ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி அவுஸ்திரேலியா, பிரிஸ்பேர்ணில் ஆரம்பித்துள்ளது.

பிரிஸ்பேர்ணில் காலை வேளையில் மழை பெய்த போதும், போட்டி ஆரம்பமாகும் வேளையில் மழை இல்லாமல் போயுள்ளது, ஆனால் கரு முகில் கூட்டங்கள் தென்படுகின்றன. போட்டியின்
நடுவே மழை பெய்வதற்கான சூழ்நிலை காணப்படுகிறது. மழை காரணமாக போட்டி தடைப்பட்டால் இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவு ஏற்படும். அடுத்த சுற்றுக்கு தெரிவாவதற்கு உள்ள சிறிய வாய்ப்பும் இல்லாமல் போகும்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

அணி விபரம்
ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரரான ஹஸ்ரதுள்ளா சஸை உபாதை காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார்.

இலங்கை அணி சார்பாக சாமிக்க கருணாரட்ன நீக்கப்பட்டு ப்ரமோட் மதுஷான் இணைக்கப்பட்டுள்ளார்

இலங்கை

1 குசல் மென்டிஸ் , 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 தனஞ்சய டி சில்வா 4 பானுக ராஜபக்ச, 5 சரித் அசலங்க, 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 ப்ரமோட் மதுஷான் , 9 மஹீஷ் தீக்ஷன, 10 லஹிரு குமார 11 கஸூன் ரஹித

ஆப்கானிஸ்தான் அணி

ரஹ்மனுள்ளா குர்பாஸ், இப்ரஹிம் சட்ரன், உஸ்மன் காணி, நஜிபுல்லா சட்ரன், குலாபிடின் நபி மொஹமட் நபி, அஸ்மதுள்ளா ஓமரஸை, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், பரீட் அஹ்மத், பசல்ஹக் பரூகி

Social Share

Leave a Reply