கனடா ரொரன்டோவில் நடைபெற்ற ரொரன்டோ லீக் T20 தொடரில் இலங்கையிலிருந்து புலம்பெயர்நது சென்ற தமிழர்களினால் உருவாக்கப்பட கழகமான மார்க்ஷெயார் கழகம் சம்பியனாகியுள்ளது.
60 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றிய இந்த தொடரில் முதற்தடவையாக கழமிறங்கிய மார்க்ஷெயார் அணி லெஜன்டஸ் கேரலா கிரிக்கட் அணியினரை வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர்.
இந்தப்போட்டியில் முதலில் துடுப்பாடிய லெஜன்டஸ் கேரலா கிரிக்கட் அணி 20 ஓவர்களில் 9 விக்கட்களைஇழந்து 121 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய மார்க்ஷெயார் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கட்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்று 5 விக்கட்களினால் வெற்றி பெற்றது.