பெங்களூர் அணிக்கு வெற்றி அடுத்த சுற்றை நெருங்குகிறது

ஐ . பி . எல் கிரிக்கெட் போட்டி தொடரில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் எவின் லுயிஸ் 58(37) , ஜைஸாஸ்வி ஜய்ஸ்வால் 31(22) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் ஹர்ஷால் பட்டேல் 3(4-34) , யுஸ்வேந்திரா ஷஹால் 2 (4-18), ஷபாஸ் அஹமட் 2 (2-10) விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் கிளென் மக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 50 (30), ஸ்ரீகர் பரத் 44(35) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் முஸ்டபிசூர் ரஹ்மான் 2 (3-20) விக்கெட்களை கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக யுஸ்வேந்திரா ஷஹால் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 11 போட்டிகளில் 14 புள்ளிகளை பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது. இன்றைய தோல்வியின் மூலம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 11 போட்டிகளில் 8 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில் அவர்கள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

நாளைய தினம்(30.09) சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைஸ்ஸ் ஹைட்ராபாட் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

பெங்களூர் அணிக்கு வெற்றி அடுத்த சுற்றை நெருங்குகிறது

Social Share

Leave a Reply