பால்மா தட்டுப்பாடு வரும் வாரம் தீரும்
இலங்கையில் தற்போது நிலவி வரும் பால்மா தட்டுப்பாடு வரும் வாரம் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 04ஆம் திகதி திங்கட்கிழமை துறைமுகத்தில் தேங்கியுள்ள பால் மா கொள்கலன்களை வெளியே கொண்டுவரமுடியுமென பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
துறைமுகத்தில் 360 மெட்ரிக் தொன் பால்மா பக்கட்டுகள் 16 கொள்கலன்களில் தேங்கியுள்ளதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்காகன டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த பால் மா தொகுதிகளை வெளியே கொண்டுவந்தால் வரும் வாரம் பால்மா விநியோகத்தை செய்து பால்மா தட்டுப்பாட்டினை நீக்க முடியுமென பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.