நாளை 01 ஆம் திகதி அதிகாலை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. ஆனாலும் மாகாண போக்குவரத்து தடை நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கிடையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே போக்குவரத்தில் ஈடுபட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து சேவைகளும் மாகாணங்களுக்கிடையில் இரண்டு வாரங்களுக்கு ஆரம்பிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் உள்ளூர் மற்றும் மாகாண போக்குவரத்து சேவைகள் இடம்பெறும்.