கொழும்பு, மட்டக்குளிய இராணுவ முகாமின் லெப்டினன் கேணல் தர கட்டளை தளபதி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளியவை சேர்ந்த கிராம உத்தியோகத்தர் ஒருவரின் 36 வயதான மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே குறித்த அதிகாரியின் மனைவி அடங்கலாக, 13 இராணுவ சிப்பாய்கள் இந்த கொலை சம்பவத்தின் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசார், இராணுவ பொலிசாரிடம் இந்த விசாரணைக்காக உயர் அதிகாரியினை தங்களிடம் கையளிக்குமாறு கேட்டதையடுத்து, கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் குறித்த அதிகாரி கையளிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் தயவு தாட்சயணமின்றி கடும் நடவடிக்கை எடுக்குமாறு இராணுவ தளபதி உயர் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
