ICC T20 உலக கிண்ண தொடரின் இரண்டாம் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இறுதியாக நடைபெற்ற இந்தியா மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை இந்தியா அணி பெற்றுக்கொண்டது.
இன்று காலையில் நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்கா அணி தோலிவியடைந்ததன் மூலம் அரை இறுதி வாய்ப்பை இழந்தது. வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி அடுத்த உலக கிண்ணத்துக்கு தகுதி பெற்றுள்ளது.
பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.
இந்த முடிவுகளின் படி புதன்கிழமை இலங்கை நேரப்பபடி 1.30 இற்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் முதலாவது அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்பபடி 1.30 இற்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இரண்டாவது அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் அணி 6 தடவைகளுகும், மற்றைய மூன்று அணிகளும் தலா நான்கு தடவைகளும் அரை இறுதி போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன. நியூசிலாந்து அணியினை தவிர மற்றைய சகல அணிகளும் தலா ஒவ்வொரு தடவைகள் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
சிம்பாவே மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் லோகேஷ் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் துடுப்பாட்டடத்தின் மூலம் சிறந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக்கொண்டது. இன்றைய போட்டியில் டினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷாப் பான்ட் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அவர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.
இந்தியா அணி பந்துவீச்சில் ஆரம்பத்திலேயே விக்கெட்களை கைப்பற்ற சிம்பாவே அணி தடுமாறி போனது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
வெஸ்லி மாதவேர் | பிடி – விராட் கோலி | புவனேஷ்வர் குமார் | 00 | 01 | 0 | 0 |
கிரைக் ஏர்வின் | பிடி – ஹார்டிக் பாண்ட்யா | ஹார்டிக் பாண்ட்யா | 13 | 15 | 2 | 0 |
ரெகிஸ் சகப்வா | Bowled | அர்ஷ்தீப் சிங் | 00 | 06 | 0 | 0 |
சீன் வில்லியம்ஸ் | பிடி – புவனேஷ்வர் குமார் | மொஹமட் ஷமி | 11 | 18 | 0 | 1 |
சிகந்தர் ரசா | பிடி – சூரியகுமார் யாதவ் | ஹார்டிக் பாண்ட்யா | 00 | 03 | 0 | 0 |
ரொனி முன்யொங்கா | L.B.W | மொஹமட் ஷமி | 05 | 04 | 1 | 0 |
ரயான் பேர்ல் | Bowled | ரவிச்சந்திரன் அஷ்வின் | 35 | 22 | 2 | 1 |
வெலிங்டன் மச்கட்ஷா | பிடி – ரோஹித் ஷர்மா | ரவிச்சந்திரன் அஷ்வின் | 01 | 07 | 0 | 0 |
ரிச்சர்ட் நகரவா | Bowled | ரவிச்சந்திரன் அஷ்வின் | 01 | 02 | 0 | 0 |
ரென்டை சட்டாரா | பிடி – அக்ஷர் படேல் | அக்ஷர் படேல் | 04 | 03 | 1 | 0 |
பிளெஸ்ஸிங் முஷரபாணி | ||||||
உதிரிகள் | 11 | |||||
ஓவர் 17.3 | விக்கெட் 10 | மொத்தம் | 115 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
புவனேஷ்வர் குமார் | 03 | 01 | 11 | 01 |
அர்ஷ்தீப் சிங் | 02 | 00 | 09 | 01 |
மொஹமட் ஷமி | 02 | 00 | 14 | 02 |
ஹார்டிக் பாண்ட்யா | 03 | 00 | 16 | 02 |
ரவிச்சந்திரன் அஷ்வின் | 04 | 00 | 22 | 03 |
அக்ஷர் படேல் | 3.2 | 00 | 40 | 00 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
லோகேஷ் ராஹுல் | பிடி – வெலிங்டன் மசகட்ஸா | சிகந்தர் ரசா | 51 | 35 | 3 | 3 |
ரோஹித் ஷர்மா | பிடி – வெலிங்டன் மசகட்ஸா | பிளெஸ்ஸிங் முஷரபாணி | 15 | 13 | 2 | 0 |
விராட் கோலி | பிடி – ரயான் புர்ள் | சீன் வில்லியம்ஸ் | 26 | 25 | 2 | 0 |
சூரியகுமார் யாதவ் | Not Out | 61 | 25 | 9 | 4 | |
ரிஷாப் பான்ட் | பிடி – ரயான் புர்ள் | சீன் வில்லியம்ஸ் | 03 | 05 | 0 | 0 |
ஹார்டிக் பாண்ட்யா | பிடி – பிளெஸ்ஸிங் முஷரபாணி | ரிச்சர்ட் ங்கரவா | 18 | 18 | 2 | 0 |
அக்ஷர் படேல் | Not Out | 00 | 00 | 0 | 0 | |
உதிரிகள் | 12 | |||||
ஓவர் 20 | விக்கெட் 05 | மொத்தம் | 186 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ரிச்சர்ட் ங்கரவா | 04 | 00 | 44 | 01 |
தெண்டை சதரா | 04 | 00 | 34 | 00 |
பிளெஸ்ஸிங் முஷரபாணி | 04 | 00 | 50 | 01 |
வெலிங்டன் மசகட்ஸா | 02 | 00 | 12 | 00 |
ரயான் புர்ள் | 01 | 00 | 14 | 00 |
சிகந்தர் ரசா | 03 | 00 | 18 | 01 |
சீன் வில்லியம்ஸ் | 02 | 00 | 09 | 02 |