இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு நியூ சவுத் வேல்ஸ் நீதீர்மன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. 150,000 டொலர்கள் ரொக்க பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தனுஷ்க குணதிலகவுக்கு இலங்கை கிரிக்கெட் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆதாரவு வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரின்டர் இணைப்பு செயலி மூலமாக அவுஸ்திரேலியாவில் 29 வயதான பெண் ஒருவருடன் நட்பை ஏற்படுத்தி அவரை நேரில் சந்தித்த வேளையில் அவரை பாலியல் பலாத்காரம் செய்தார் என நான்கு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். டோனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தினால் பிணை மனு நிராகரிக்கப்பட்ட வேளையில், மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையிலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ள அதேவேளை கடும் நிபந்தனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இரவு 11 மணி முதல் காலை 06 மணி வரை ஊரடங்கு, தினமும் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகவேண்டும் எனவும், ரின்டர் உட்பட்ட சமூக வலைத்தளங்களை பாவிக்க தடை, வேறு ஏதாவது குற்றச்சாட்டுகளுக்கு உட்படக்கூடாது போன்ற நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தனுஷ்க குணதிலக கடந்த 11 தினங்களாக சிறைக்கைதிகளுக்கான உடையோடு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.