டென்மார்க் மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலக கிண்ண தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான போட்டி கடும் விறு விறுப்பாகவே நடைபெற்றது. பிரான்ஸ் அணி சார்பாக கைலியன் மாபே 61 ஆவது நிமிடத்தில் முதல் கோலை பெற்றார். போராடிய டென்மார்க் அணி 7 நிமிடங்களில் அன்றியெஸ் கிறிஸ்டியன்சன் அடித்த கோலின் மூலமாக போட்டியினை சமன் செய்தது.
போட்டி மேலும் விறு விறுப்படைந்து சென்ற நிலையில் மாபே 86 ஆவது நிமிடத்தில் வெற்றி கோலை அடித்தார். இந்த கோலின் மூலமாக இந்த தொடரில் மாபே 3 கோல்களை அடித்துள்ளார்.
ஏற்கனவே பிரான்ஸ் அணி அவுஸ்திரேலிய அணியினை வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த சுற்றுக்கு முதலாவது அணியாக தெரிவாகியுள்ளது. குழு D இல் மீதமுள்ள 3 அணிகளுக்கும் இன்னமும் வாய்ப்பு காத்திருக்கின்றது.
| அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
| 1 | பிரான்ஸ் | 02 | 02 | 00 | 00 | 06 | 04 | 06 | 02 |
| 2 | அவுஸ்திரேலியா | 02 | 01 | 00 | 01 | 03 | -02 | 02 | 04 |
| 3 | டென்மார்க் | 02 | 00 | 01 | 01 | 01 | -01 | 01 | 02 |
| 4 | டுனீசியா | 02 | 00 | 01 | 01 | 01 | -01 | 00 | 01 |