லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதற் போட்டி ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் கிளாடியேட்டரஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்த போதும், மைதானம் காய்ந்த நிலையில் காணப்படுகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல் கிளாடியேட்டரஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
ஜப்னா கிங்ஸ் அணி சார்பாக விஜஸ்காந்த் முதற் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தை பெற்றுள்ளார்.
அணி விபரம்
ஜப்னா கிங்ஸ்
திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, ரஹ்மனுள்ள குர்பாஸ், தனஞ்சய டி சில்வா, ரொம் கொஹ்லர் கட்மோர், சொஹைப் மலிக், ஜேம்ஸ் புல்லர், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, விஜயகாந்த் விஜாஸ்காந், பினுர பெர்னாண்டோ.
கோல் கிளாடியேட்டர்ஸ்
குஷல் மென்டிஸ், அஸாம் கான், நுவனிது பெர்னாண்டோ, இப்திகார் அஹமட், மொவின் சுபசிங்க, இமாட் வசீம், புளின தரங்க, நுவான் துஷார, நுவான் பிரதீப், வஹாப் ரியாஸ், சம்மு அஸான்.