பாடசாலை சிற்றுண்டி சாலைகள், பஸ், வான்களில் போதை சோதனை

பாடசாலை சிற்றுண்டி சாலைகளில் மட்டுமன்றி, பாடசாலை போக்குவரத்து பேரூந்துகள், வான்களிலும் போதை பொருள் சோதனைகள் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் போதை தடுப்பு நிகழ்ச்சி திட்டம் ஜனவரி 02 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் தொடர்பில் சகல மாகாண பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக அறிவுறுத்தல்கள் இரண்டு, மூன்று தினங்களில் கல்வியமைச்சின் செயலாளர் மூலம் அறிவிக்கப்படுமெனவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் ஊட்டச்சத்து நிகழ்ச்சி திட்டத்துக்கு மேலதிகமாக. போதை தடுப்பு நிகழ்ச்சி திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும், கொழும்பில் 144 பாடசாலைகளில் இந்த செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், நாடு பூராகவும் 100 வலய கல்வி பணிமனைகளுக்கு உட்பட்ட 10,150 பாடசாலைகளில் இந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் ஊடகவியலார் சந்திபில் வெளிப்படுத்தினார்.

பாடசாலை தவிர்ந்த தனியார் கல்வி நிலையங்கள் போன்ற இடங்களில் நடைபெறும் செயப்பற்பாடுகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டுமெனவும், பாடசாலைகளில் பிள்ளைகள் வெறும் 6 மனித்த்தியாலங்களே இருப்பதாகவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

அண்மையில் கிழக்கு மாகாண பாடசாலை ஒன்றில் நடைபெற்ற போதை சம்மந்தப்பட்ட சம்பவத்துக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply