தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல்நலக்குறைவால் 67 வயதில் மரணமடைந்துள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் அதிகமாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் சிவ நாராயணமூர்த்தி, சிவாஜி, ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களுடன் 218ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விவேக், வடிவேலு நகைச்சுவைகளில் பிரபலமாக அறியப்பட்ட இவர் திடீர் உடல்நலக்குறைவால் மரணித்துள்ளார். இவரது மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.