2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான மூன்றாவது வாக்கெடுப்பு இன்று(08.12) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பு 43 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வாக்களிப்பில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 80 வாக்குகள் வழங்கப்பட்டன. பாரளுமன்ற உறுப்பினர்கள் வேலுகுமார், சி.வி விக்னேஸ்வரன் ஆகியோர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சராக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செல்வது திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இம்மாதம் 14 ஆம் திகதி வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.