புலமைப்பரிசில் வகுப்புகளுக்கு எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை முடியும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 14ம் திகதி முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகளை நடாத்துதல் மற்றும் மேற்படி பரீட்சை தொடர்பான சகல கருத்தரங்குகள், விரிவுரைகள், பயிற்சிநெறிகள் நடத்துதல், பரீட்சைக்கான யூக வினாக்கள் உள்ளிட்ட கேள்விகளை அச்சடித்து விநியோகித்தல் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சை வினாக்களில் அல்லது அதுபோன்ற கேள்விகளில் வினாக்கள் வழங்கப்படும் என இலத்திரனியல் ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிடுவது அல்லது வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.