கட்சி முடிவை மீறியவர்கள் அவர்களே – வேலுகுமார் MP

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கட்சி முடிவை மீறி, வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் கண்டி பாரளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வாக்களிக்காமல் இருந்ததாக கூறி அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்துவாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்திருந்தார்.

அவ்வாறான நிலையில் தான் கட்சி விதிமுறைகளை மீறி வாக்களிப்பில் இருந்து விலகியிருக்கவில்லை எனவும், கட்சி கூட்டத்தில் வாக்களிப்பில் இருந்து அனைவரும் விலகி இருப்பதாகவே முடிவெடுக்கப்பட்டது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் கட்சியிலிருந்து இடை நிறுத்தப்பட்டது தொடர்பாகாவும், ஆளும் கட்சியோடு இணையும் திட்டங்கள் உள்ளனவா எனவும் அவரை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது ” தான் ஆளும் கட்சியோடு இணைவதாக இருந்தால் ஆதரவாக வாக்களித்திருப்பேன். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. ஆகவே அவ்வாறான எண்ணங்கள் எதுவுமில்லை” என மறுப்பு தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கட்சி கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும், கட்சியால் தன்னை நீக்குவது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறிய வேலுகுமார் MP, கட்சி கூட்டத்தில் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை என்றே முடிவெடுக்கப்பட்டது எனவும், அந்த முடிவின் படியே தான் செயற்பட்டதாகவும், வாக்களித்தவர்களே முடிவிலிருந்து மாறி வாக்களித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply