முட்டை உற்பத்தியாளர்களின் செலவுகளை குறைக்கும் வகையில் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அரசாங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சந்தையில் முட்டை விநியோகம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக வர்த்தக அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முட்டை உற்பத்தியாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்றுநோய், தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சோயா, சோளம் மற்றும் பிற கால்நடை தீவனங்களின் விலையில் விரைவான அதிகரிப்பே முட்டை உற்பத்தித் தொழிலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன, இதன் விளைவே முட்டை பிரச்சினைக்கான காரணம் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், தற்போது கால்நடை தீவன விலைகள் குறைந்து வருவதாகவும், எதிர்காலத்தில் தொடர்ந்து தீவன விலையில் வீழ்ச்சி ஏற்படும் எனவும் தெரிவித்தார். சந்தையில் முட்டை விநியோகத்தை அதிகரிக்கும் வகையில் முட்டை உற்பத்தியாளர்களுக்கு கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் அரச அதிகாரிகளிடம் கலந்துரையாடியுள்ளார்.