2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதகமான வரவு செலவுத் திட்டம் என தாம் நம்புவதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மக்களுக்குத் தேவையான நிவாரணம் கிடைக்கும் என தான் நம்புவதாகவும், இது பொதுவாக நல்ல வரவு செலவு திட்டம் என்று மக்கள் கூறுகிறார்கள், எனவே நானும் இது ஒரு நல்ல வரவு செலவு திட்டம் என நம்புகின்றேன் எனவும் , அதுவரையில் மக்களை சற்று பொறுமையாக செயற்படுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தளுக்கு தாம் தயாராகவே இருப்பதாகவும், எனினும் அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதால், அது தொடர்பில் இன்னும் எதிர்பார்ப்புகள் இல்லை எனவும்கூறியுள்ளார் .
ஜனாதிபதியும் , நிதியமைச்சருமான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பாரளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அதற்கான இறுதி வாக்களிப்பு நாளை 13 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை முன் வைத்துள்ளார்.