கடந்த 10ம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய, துபாய்க்கு தப்பிச் சென்ற வர்த்தகரான கார் சாரதி நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று இரவு 09.50 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அப்போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் பணிபுரிந்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
அதன் பின்னர் அவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையதிற்கு விரைந்து கார் சாரதியை கொள்ளுப்பிட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.