காற்பந்து உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டி இன்று கட்டாரில் நடைபெறவுள்ளது. குரேஷியா மற்றும் ஆர்ஜன்டீனா அணிகளுக்கிடையில் முதலாவது அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
இரு அணிகளும் இரண்டாம் தடவையாக அரை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளன. கடந்த முறை உலக கிண்ண தொடரில் குரேஷியா அணி ஆர்ஜன்டீனா அணியினை 3-0 என முதல் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
ஆர்ஜன்டீனா அணி ஐந்து தடவைகள் அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. அரை இறுதிப் போட்டிகளில் ஆர்ஜன்டீனா அணி இதுவரை தோற்றதில்லை. விளையாடிய ஐந்து தடவைகளுக்கு அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
குரேஷியா அணி மூன்றாம் தடவை அரை இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. 1998 ஆம் ஆண்டு அவர்களின் முதல் உலக கிண்ண தொடரில் அரை இறுதிப் போட்டியில் தோல்வியினை சந்தித்தவர்கள், இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் கடந்த வருடம் வெற்றி பெற்றுக் கொண்டார்கள்.
இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது. கட்டார் நேரப்படி இரவு 10.00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.