உருட்டி எடுக்கப்பட்ட தம்புள்ள

கண்டி பல்கொன்ஸ், தம்புள்ள ஓரா அணிகளுக்கிடையில் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானானத்தில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டியில், கண்டி அணி இலகுவான பெரிய வெற்றி ஒன்றை தம்புள்ள அணிக்கெதிராக பெற்றுக்கொண்டது.

194 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய தம்புள்ள அணி 14.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தம்புள்ள அணி சார்பாக துடுப்பாட்டத்தில் எவரும் பெரியளவில் சோபிக்கவில்லை. கண்டி அணி ஆரம்பம் முதல் மிக அபாரமாக பந்துவீசி தம்புள்ள அணியை உருட்டி எடுத்தது.

சாமிக்க கருணாரட்ன, ஆரம்ப விக்கெட்களை தகர்க்க அதன் பின்னர் கார்லோஸ் ப்ராத்வைட் விக்கெட்களை கைப்பற்றினார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி பல்கொன்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. சிறந்த ஆரம்பத்தின் மூலமாக பலமான ஓட்ட எண்ணிக்கை ஒன்றை பெற்றுள்ளது. பத்தும் நிஸ்ஸங்க, அன்றே பிளட்சர் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 46 ஓட்டங்களை பகிர்ந்தனர். அன்றே பிளட்சரின் அதிரடி கண்டி அணிக்கு கைகொடுத்தது.

கமின்டு மென்டிஸ் மற்றும் அஷேன் பண்டாரா ஆகியோர் இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி மத்திய வரிசையில் ஓட்டங்களை குவித்தனர்.

தம்புள்ள அணியின் பந்துவீச்சாளர்கள் இணைப்பாட்டங்களை முறியடிக்க தவறியமை அவர்களுக்கு பின்னடைவை உருவாக்கியது.

இந்த வெற்றியின் மூலம் கண்டி அணிக்கான அடுத்த சுற்று தெரிவு இலகுவாகியுள்ளது. தம்புள்ள அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அணி விபரம்

கண்டி பல்கொன்ஸ்

வனிந்து ஹஸரங்க, பத்தும் நிஸ்ஸங்க, அன்றே பிளட்சர், கமிண்டு மென்டிஸ், அஷேன் பண்டாரா, நஜிபுல்லா ஷர்டான், சாமிக்க கருணாரட்டன, கார்லோஸ் ப்ராத்வைட், இசுரு உதான, பேபியன் அலன், சமிந்து விஜயசிங்க

தஸூன் சாணக்க, ஷெவான் டானியல், ஜோர்டான் கொக்ஸ், பானுக்கா ராஜபக்ஷ, லசித் க்ரூஸ்புள்ளே, ரமேஷ் மென்டிஸ், சத்துரங்க டி சில்வா நூர் அஹமட், சிகான்டர் ரஷா, ப்ரமோட் மதுஷான், போல் வன் மீகெறன்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஷெவான் டானியல்பிடி – அஷேன் பண்டாராசாமிக்க கருணாரட்டன090510
லசித் க்ரூஸ்புள்ளேபிடி – வனிந்து ஹஸரங்கசாமிக்க கருணாரட்டன130930
ஜோர்டான் கொக்ஸ்பிடி – அன்றே பிளட்சர்,கார்லோஸ் ப்ராத்வைட்010300
பானுக்கா ராஜபக்ஷபிடி – மினோட் பானுக்கசமிந்து விஜயசிங்க182201
ரமேஷ் மென்டிஸ்L.B.Wகார்லோஸ் ப்ராத்வைட்040700
தஸூன் சாணக்கபிடி – அன்றே பிளட்சர்கார்லோஸ் ப்ராத்வைட்000100
சிகான்டர் ரஷாபிடி – அஷேன் பண்டாராபேபியன் அலன்010300
சத்துரங்க டி சில்வாபிடி – சொஹைப் மலிக்சமிந்து விஜயசிங்க251540
போல் வன் மீகெறன்பிடி – சுமிந்த லக்ஷன் 100810
ப்ரமோட் மதுஷான்பிடி – சாமிக்க கருணாரட்டனசமிந்து விஜயசிங்க050510
நூர் அஹமட்L.B.W 200812
உதிரிகள்  10   
ஓவர்  14.2விக்கெட்  10மொத்தம்116   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்ட விக்
இசுரு உதான01000800
கார்லோஸ் ப்ராத்வைட்03002503
சாமிக்க கருணாரட்டன02001102
பேபியன் அலன்1.2000502
கமிண்டு மென்டிஸ்02001900
சமிந்து விஜயசிங்க03002503
வனிந்து ஹஸரங்க02002300

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கபிடி – வன் மீகெறன்சத்துரங்க டி சில்வா262030
அன்றே பிளட்சர்Run Out 443143
கமிண்டு மென்டிஸ்பிடி – சிகான்டர் ரஷாப்ரமோட் மதுஷான்584090
அஷேன் பண்டாரா  422241
நஜிபுல்லா ஷர்டான்  160811
       
       
       
       
       
       
உதிரிகள்  07   
ஓவர்  20விக்கெட்  03மொத்தம்193   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
தஸூன் சாணக்க02002200
ப்ரமோட் மதுஷான்04003901
போல் வன் மீகெறன்04003700
சத்துரங்க டி சில்வா03002601
நூர் அஹமட்04002600
சிகான்டர் ரஷா02003200
ரமேஷ் மென்டிஸ்01001000

உருட்டி எடுக்கப்பட்ட தம்புள்ள

Social Share

Leave a Reply