பாடசாலை உபகரணங்களில் விலை மாற்றும் வியாபாரம்!

தற்போதுள்ள விலையில் மாற்றம் செய்து பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் சுற்றிவளைப்பு நடத்தப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களில் பதிவு செய்யப்பட்ட விலைகள் மாற்றப்பட்டு தற்போதைய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவ்வாறான விலை மாற்றங்களை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், அவர்களிடமுள்ள பாடசாலை உபகரணங்கள், கொப்பிகள் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பயிற்சி புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு இது தொடர்பான சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply