ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று (13.12) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், பேருந்தில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலி-கொழும்பு பிரதான வீதியில் வடக்கு பயாகல பிரதேசத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, விளக்குகள் எரியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது, லொறியில் பின்பக்கம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கூரைத்தகடுகள், பேருந்தின் மீது வீசப்பட்டதன் காரணமாகவே பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த ஆடைத் தொழிரசாலை ஊழியர்கள் தற்போது களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.