ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொண்டால் உதவித்தொகை!

ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவதாலும், இறப்புகள் அதிகம் இருப்பதாலும் அங்கு மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது எனவே இதனை கட்டுப்படுத்த  ஜப்பான் அரசாங்கம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு அந்நாட்டில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 604 பிறப்புகளும், 14 லட்சத்து 39 ஆயிரத்து 809 இறப்புகளும் பதிவாகி உள்ளது, இந்நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கவுள்ளது, அதன் ஒரு பகுதியாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் யென் உதவுதொகையாக வழங்கிவரும் நிலையில், இந்த தொகையை 5 லட்சம் யென் ஆக வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply