ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் குழுவின் ஒருவரும், ஜனசக்தி நிறுவனத்தின் நிறுவனருமான சந்திரா சாப்டரின் மகனுமான டினேஷ் சாப்டர் நேற்று மாலை கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டிலிருந்து மதியம் கூட்டம் ஒன்றிற்காக வெளியே சென்றவர் வீடு திரும்பாத ன் நிலையில், GPS தொழில் நுட்பம் மூலமாக அவரது மனைவி அவரை தேடிச் சென்ற ன் நிலையில், பொரளை கனத்தை சுடுகாட்டில் காரினுள் ஓட்டுநர் இருக்கையில் கட்டப்பட்டு, கழுத்து வயரினால் கட்டுப்பட்ட நிலையில் 4மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன.
இந்த கொலை விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டினேஷ் சாப்டர் தொழில் ரீதியில் பல மில்லியன் ரூபாய்களை தரவேண்டியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் புகார் வழங்கியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.