வவுனியா மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிகளை ஏற்றியுள்ளது மிக குறைவாக காணப்படுகிறது. 20-60 வயதுக்கு உட்பட்டவர்களே வீதிகளில் அதிகம் தேவையற்ற ரீதியில் உலாவுகின்றனர். இவர்களே கொரோனா தொற்றின் நோய் காவிகளாக காணப்படுகின்றனர்.
இவர்களே வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கும் வயோதிபர்களுக்கு கொரோனா தொற்றினை வழங்கிவருபவர்கள். இவர்களினால்தான் வீட்டை விட்டு வெளியே வராத பலரும் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி இறந்துள்ளனர்.
எதிர்காலத்தில் வருமென எதிர்பார்க்கப்படும் திரிபடைந்த கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது. பரவும் வேகம் கொண்டது. ஆகவே தடுப்பூசிகளை பெறாதவர்கள், குறிப்பாக 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக தங்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறும், தேவையற்று வீதிகளில் சுற்றுவதையும், தேவையற்று ஒன்று கூடுவதையும் நிறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
உங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாப்பது உங்கள் கைகளிலேயே உள்ளது.
எம்மையும், எம் உறவுகளையும், எங்கள் ஊரையும், நாட்டையும் காப்போம்.
சுகாதர திணைக்களம்
வவுனியா
பொலிஸ் திணைக்களம்
வவுனியா
