இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்லா நேற்று இரவு 7.40 இற்கு (02.10) இலங்கையை வந்தடைந்தார். நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இங்கே அவர் வருகை தந்துள்ளார்.
அரச தரப்பின் முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி போன்ற கடசிகளது உறுப்பினர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
இலங்கை வெளியுறவு துறை அமைச்சின் முக்கியஸ்தர்கள், மற்றும் இந்திய தூதரகத்தின் முக்கியஸ்தர்கள் இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தனை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சென்று வரவேற்றனர்.
