லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தம்புள்ள ஓரா, கோல் க்ளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் தம்புள்ள அணி 47 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. முதல் ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில் ஆறாவது போட்டியில் முதல் வெற்றியினை தம்புள்ள அணி பதிவு செய்துள்ளது.
மீதமுள்ள இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தம்புள்ள அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கலாம். அந்த வாய்ப்பு காலி மற்றும் கொழும்பு அணிகள் விளையாடவுள்ள போட்டிகளிலும் தங்கியுள்ளது.
178 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய காலி அணி 19.4 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஆரம்பம் முதலே விக்கெட்களை காலி இழந்தமையினால் வெற்றி இலக்கை பெறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டது.
ப்ரமோட் மதுஷான், தஸூன் சாணக்க ஆகியோர் சிறப்பாக பந்துவீசினார்கள். ஆரம்ப விக்கெட்களை அவர்கள் உடைத்தமையே வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய தம்புள்ள அணி 20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஷெவோன் டானியல் மற்றும் ஜோர்டான் கொக்ஸ் ஆகியோரின் சிறப்பான அதிரடியான ஆரம்பம் இந்த இலக்கை பெற உதவியது. இந்த இணைப்பாட்டம் 96 ஆக காணப்பட்ட வேளையில் மிகவும் இலகுவான பிடி ஒன்று நழுவ விடப்பட்டது. அதன் பின்னர் இருவரும் சத இணைப்பாட்டத்தை பகிர்ந்து கொண்டனர். 163 ஓட்டங்களை 17 ஓவர் வரை துடுப்பாடி பெற்றுக்கொண்டனர்.
தம்புள்ள அணி ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில் இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிடும். வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக் முடியும். காலி அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை பெறும் அதேவேளை கொழும்பு அணியும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகிவிடும்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| தனுக்க டபாரே | பிடி – ஷெவான் டானியல் | ப்ரமோட் மதுஷான் | 04 | 05 | 1 | 0 |
| குசல் மென்டிஸ் | பிடி – ப்ரமோட் மதுஷான் | கார்லோஸ் ப்ராத்வைட் | 00 | 01 | 0 | 0 |
| லஹிரு உதார | பிடி – ஜோர்டான் கொக்ஸ் | தஸூன் சாணக்க | 19 | 23 | 2 | 0 |
| ஆஷாட் ஷபிக் | பிடி – தஸூன் சாணக்க | ப்ரமோட் மதுஷான் | 28 | 14 | 3 | 2 |
| நுவனிது பெர்னாண்டோ | Run out | 05 | 03 | 1 | 0 | |
| இப்திகார் அஹமட் | பிடி – நுவனிது பெர்னாண்டோ | சிகண்டர் ரஷா | 21 | 21 | 1 | 1 |
| இமாட் வசீம் | Bowled | நூர் அஹமட் | 03 | 07 | 0 | 0 |
| வஹாப் ரியாஸ் | பிடி – ஜோர்டான் கொக்ஸ் | டிலும் சுதீர | 13 | 08 | 1 | 1 |
| லக்ஷன் சன்டகன் | Bowled | ப்ரமோட் மதுஷான் | 04 | 16 | 0 | 0 |
| நுவான் பிரதீப் | பிடி – ஷெவான் டானியல் | சிகண்டர் ரஷா | 10 | 09 | 0 | 1 |
| உதிரிகள் | 09 | |||||
| ஓவர் 19.4 | விக்கெட் 10 | மொத்தம் | 130 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| தஸூன் சாணக்க | 03 | 00 | 10 | 01 |
| ப்ரமோட் மதுஷான் | 2.4 | 01 | 17 | 03 |
| சமிந்து விக்ரமசிங்க | 01 | 00 | 18 | 00 |
| மத்தியு போர்ட் | 02 | 00 | 23 | 01 |
| டிலும் சுதீர | 04 | 00 | 35 | 01 |
| நூர் அஹமட் | 04 | 00 | 17 | 01 |
| சிகண்டர் ரஷா | 03 | 00 | 05 | 02 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ஷெவான் டானியல் | பிடி – தரங்க | நுவான் பிரதீப் | 80 | 55 | 5 | 5 |
| ஜோர்டான் கொக்ஸ் | பிடி – இகலகமகே | நுவான் துஷார | 77 | 58 | 6 | 3 |
| தஸூன் சாணக்க | பிடி – நுவனிது பெர்னாண்டோ | நுவான் பிரதீப் | 12 | 05 | 1 | 1 |
| பானுக்கா ராஜபக்ஷ | பிடி – தரங்க | நுவான் பிரதீப் | 00 | 01 | 0 | 0 |
| சிகான்டர் ரஷா | RunOut | 00 | 03 | 0 | 0 | |
| மட் போர்ட் | 00 | 00 | 0 | 0 | ||
| உதிரிகள் | 09 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 05 | மொத்தம் | 178 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| இமாட் வசீம் | 04 | 00 | 38 | 00 |
| நுவான் துஷார | 04 | 00 | 29 | 01 |
| நுவான் பிரதீப் | 03 | 00 | 37 | 03 |
| வஹாப் ரியாஸ் | 03 | 00 | 28 | 00 |
| லக்ஷன் சன்டகன் | 03 | 00 | 16 | 00 |
| தனுக்க டாபரே | 01 | 00 | 08 | 00 |
| இப்திகார் அஹமட் | 02 | 00 | 16 | 00 |
