கண்டி பல்கொன்ஸ் மற்றும் தம்புள்ள ஓரா அணிகளுக்கிடையிலான போட்டி முக்கிய போட்டியாக ஆரம்பித்துள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள கண்டி அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
கண்டி அணி முதலிடத்தை ஓட்ட நிகர சராசரி வேகமின்றி பெற்றுக் கொள்ள இந்தப் போட்டி முக்கியமானதாக அமையவுள்ளது. தம்புள்ள அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு இன்றும் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை காணப்படுகிறது. ஒரு வெற்றியினை மட்டுமே பெற்றுள்ள தம்புள்ள அணி, மூன்று மற்றும் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள கொழும்பு, காலி அணிகளுடன் போட்டியிட்டுக்கொண்டிருக்கிறது.
கண்டி அணி முதல் சுற்றின் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. மற்றைய நான்கு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு போட்டிகள் மீதமுள்ளன. நாளையுடன் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைகின்றன.