காற்று மாசுபாடு மீண்டும் அதிகரித்துள்ளது.

கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் காற்றின் தரம் இன்று மீண்டும் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

இன்றைய நிலவரத்திற்கு அமைய, கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் 150க்கு மேல் பதிவாகியுள்ளது. இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், யாழ்ப்பாணம், புத்தளம், பதுளை மற்றும் பொலனறுவை ஆகிய பகுதிகளில் வார இறுதியில் நாட்களில் காற்றின் தரம் குறைந்து காணப்பட்டதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்து வெளியேறும் மாசுபட்ட காற்றின் விளைவாகவே இலங்கையின் காற்றின் தரம் குறைந்துள்ளது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தபோதிலும், கடந்த சில நாட்களாக நிலவிய மழையுடன் கூடிய வானிலை காரணமாகவும் காற்றின் தரம் ஏற்ற இறக்கமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply