LPL – யாழ் – கொழும்பு போட்டி

Jaffna KIngs – வனிந்துவிலும் பார்க்க விஜயஸ்காந் வருவாராம். இலங்கை, யாழ் எதிர்கால தமிழ் வீரர்கள் – கூறுகிறார் வடமாகாண கிரிக்கெட் தலைவர் ரதீபன்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள யாழ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ள நிலையில், யாழ் அணிக்கு இரண்டாம் இடமே என்பதும், கொழும்பு அணி எலிமினேட்டர் போட்டியில் விளையாடப்போகிறது என்ற நிலையிலும் இந்தப் போட்டி முக்கியத்துவம் அற்றதாக அமையவுள்ளது.

இன்றுடன் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைகின்றன. இரு அணிகளும் அடுத்த கட்ட முக்கிய போட்டிகளுக்கு தங்களை தயார் செய்ய இன்று முழுமையான பலமான அணியுடன் களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் மப்பும், மந்தாரமுமான காலநிலை காணப்படுகிறது. மீண்டும் வளி மாசு அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமை என கூறப்படுகிறது. இருப்பினும் கொழும்பின் சில பகுதிகளில் இலேசான மழை பெய்துமுள்ளது.

Social Share

Leave a Reply