பத்து வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை இன்று (20.12) முதல் தளர்த்த நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, தொலைக்காட்சி கேமராக்கள், விளையாட்டு உபகரணங்கள், பைபர் போர்ட் உள்ளிட்ட பல உபகரணங்களின் இறக்குமதித் தடை தளர்த்தப்பட்டுள்ளது.