லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் தெரிவுகாண் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி சார்பாக விஜயகாந் வியாஸ்காந்தின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் கண்டி பல்கொன்ஸ் அணியை ஜப்னா கிங்ஸ் தாம் வெற்றி பெறக்கூடிய இலக்குக்குள் கட்டுப்படுத்தியுள்ளது.
கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சயில் வெற்றி பெற்று துடுப்பாடிய கண்டி அணி 20 ஓவர்களில் விக்கெட்களை இழந்து ஓட்டங்களை பெற்றுள்ளது.
கண்டி அணியின் முதல் விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்ட போதும், இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. பத்தும் நிஸ்ஸங்க, கமிண்டு மென்டிஸ் இருவரும் இணைந்து 61 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில் வியாஸ்காந் இணைப்பாட்டத்தை முறியடுத்து இருவரையும் ஆட்டமிழக்க செய்தார். இந்த இணைப்பாட்டம் கண்டி அணிக்கான சிறந்த ஆரம்பமாக அமைந்தது. இந்த இரண்டு விக்கெட்களுமே இந்தப் போட்டியின் போக்கை மாற்றின. மீண்டும் ஒரு இணைப்பாட்டம் உருவாக்கப்பட மீண்டும் அஷேன் பண்டாரவின் விக்கெட்டினை கைப்பற்றி கொடுத்தார் வியாஸ்காந். அதன் பின்னர் கண்டி அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்ட கண்டி அணி ஓட்டங்களை பெற தடுமாறியது.
கண்டி அணியின் பந்துவீச்சு பலமானது. அதன் காரணமாக யாழ்ப்பாணம் அணி இந்த ஓட்ட எண்ணிக்கையினை இலகுவாக பெற முடியாது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுமணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அதேவேளை, தோல்வியடையும் அணி இரண்டாம் தெரிவுகாண் போட்டிக்கு செல்லும்
அணி விபரம்
ஜப்னா கிங்ஸ்
திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, ரஹ்மனுள்ள குர்பாஸ், அபிப் ஹொசைன், சதீர சமரவிக்ரம சொஹைப் மலிக், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, சுமிந்த லக்ஷன், பினுற பெர்னாண்டோ, ஷமான் கான் , விஜயகாந் வியாஸ்காந்த்
கண்டி பல்கொன்ஸ்
வனிந்து ஹஸரங்க, பத்தும் நிஸ்ஸங்க, அன்றே பிளட்சர், கமிண்டு மென்டிஸ், அஷேன் பண்டாரா, நஜிபுல்லா சர்டான் சாமிக்க கருணாரட்டன, கார்லோஸ் ப்ராத்வைட், இசுரு உதான, சமிந்து விஜயசிங்க, பேபியன் அலன்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸ்ஸங்க | Bowled | விஜயகாந் வியாஸ்காந்த் | 35 | 31 | 5 | 0 |
| அன்றே பிளட்சர் | பிடி – விஜயகாந் வியாஸ்காந்த் | 02 | 06 | 0 | 0 | |
| கமிண்டு மென்டிஸ் | பிடி- திசர பெரேரா | விஜயகாந் வியாஸ்காந் | 26 | 21 | 3 | 0 |
| அஷேன் பண்டாரா | Bowled | விஜயகாந் வியாஸ்காந் | 13 | 13 | 1 | 0 |
| நஜிபுல்லா சர்டான் | பிடி – சதீர சமரவிக்ரம | மஹீஸ் தீக்ஷண | 22 | 17 | 0 | 1 |
| வனிந்து ஹஸரங்க | பிடி – சொஹைப் மலிக் | ஷமான் கான் | 03 | 04 | 0 | 0 |
| பேபியன் அலன் | பிடி – ரஹ்மனுள்ள குர்பாஸ் | மஹீஸ் தீக்ஷண | 06 | 04 | 1 | 0 |
| கார்லோஸ் ப்ராத்வைட் | பிடி- திசர பெரேரா | பினுற பெர்னாண்டோ | 12 | 10 | 0 | 1 |
| சாமிக்க கருணாரட்டன | 14 | 13 | 0 | 0 | ||
| இசுரு உதான | 02 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 08 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 07 | மொத்தம் | 143 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| திசர பெரேரா | 02 | 00 | 17 | 01 |
| பினுற பெர்னாண்டோ | 04 | 00 | 23 | 02 |
| ஷமான் கான் | 04 | 00 | 32 | 01 |
| மஹீஸ் தீக்ஷண | 04 | 00 | 24 | 02 |
| விஜயகாந் வியாஸ்காந்த் | 04 | 00 | 30 | 03 |
| சொஹைப் மலிக் | 02 | 00 | 14 | 00 |
