லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்சமயம் கொழும்பு R.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. கொழும்பு அணி 20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாடிய கொழும்பு அணி ஆரம்ப விக்கெட்டினை முதல் ஓவரில் இழந்த போதும், கடந்த போட்டியில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய டினேஷ் சந்திமால் – சரித் அசலங்க ஜோடி சிறப்பான இணைப்பாட்டத்தை இன்றும் உருவாக்கி நல்ல ஆரம்பத்தை வழங்கினார்கள். 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாக இருவரும் பகிர்ந்த நிலையில் இளம் டுனித் வெல்லாளகே இணைப்பாட்டத்தை முறியடித்தார். ஓட்டங்களை அதிகமாக வழங்காமல் இறுக்கமாக அவர் பந்துவீசினார். வியாஸ்காந்தும் இறுக்கமாக அதிகமாக ஓட்டங்களை வழங்காமல் பந்து வீசினார்.
சரித் அசலங்க ஆட்டமிழந்து சிறிது நேரத்தில் டினேஷ் சந்திமால் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தது கொழும்பு அணிக்கு பின்னடைவை வழங்கியது. அதன் பின்னர் ஓட்டங்களை அதிகமாக பெறுவதற்கு கொழும்பு அணி தடுமாறியது. யாழ் அணியின் இறுக்கமான பந்துவீச்சு ஓட்டங்களை கொழும்பு அணி பெறுவதில் சிக்கல் நிலைகளை உருவாக்கியது. இருப்பினும் இறுதி நேரத்தில் ரவி போபரா அதிரடியாக அடித்தாடி ஓட்டங்களை உயர்த்தினார். அவரின் துடுப்பாட்டமே கொழும்பு அணி பலமான நிலை ஒன்றுக்கு செல்வதற்கு காரணமாக அமைந்தது.
வழங்கப்பட்டுள்ள இந்த ஓட்ட இலக்கினை துரத்திப் பிடிப்பது யாழ் அணிக்கு சவால் மிக்கதாக அமையும். ஆனால் பெறக்கூடிய இலக்காகவே காணப்படுகிறது.
நடப்பு உலக சம்பியனான ஜப்னா கிங்ஸ் அணியினை முதற் தடவையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள கொழும்பு ஸ்டார்ஸ் அணி சந்திதுள்ளது.
அணி விபரம்
ஜப்னா கிங்ஸ்
திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, ரஹ்மனுள்ள குர்பாஸ், அபிப் ஹொசைன், சதீர சமரவிக்ரம சொஹைப் மலிக், ஜேம்ஸ் புல்லர், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, சுமிந்த லக்ஷன், பினுற பெர்னாண்டோ, ஷமான் கான் விஜயகாந்த் வியாஸ்காந்த்
கொழும்பு ஸ்டார்ஸ்
அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், நிஷான் மதுசங்க, சரித் அசலங்க, ரவி போபரா, கரீம் ஜனட், ரவி போபரா, மொஹமட் நபி, டொமினிக் ட்ரேக்ஸ், சுரங்க லக்மால், சீக்குகே பிரசன்ன, பென்னி ஹோவெல், கஸூன் ரஜித்த
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| நிஷான் மதுசங்க | பிடி – பத்தும் நிஸ்ஸங்க | 01 | 03 | 0 | 0 | |
| டினேஷ் சந்திமால் | Run Out | 49 | 10 | 4 | 1 | |
| சரித் அசலங்க | பிடி – விஜயகாந்த் வியாஸ்காந்த் | டுனித் வெல்லாளகே | 31 | 23 | 3 | 1 |
| ரவி போபரா | 47 | 33 | 1 | 3 | ||
| அஞ்சலோ மத்தியூஸ் | Bowled | மஹீஸ் தீக்ஷண | 12 | 11 | 0 | 1 |
| மொஹமட் நபி | பிடி – சதீர சமரவிக்ரம | பினுற பெர்னாண்டோ | 15 | 19 | 0 | 1 |
| பென்னி ஹோவெல் | 01 | 01 | 0 | 0 | ||
| டொமினிக் ட்ரேக்ஸ் | ||||||
| உதிரிகள் | 07 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 05 | மொத்தம் | 163 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| திசர பெரேரா | 02 | 00 | 16 | 01 |
| பினுற பெர்னாண்டோ | 04 | 00 | 48 | 01 |
| மஹீஸ் தீக்ஷண | 04 | 00 | 34 | 01 |
| ஷமான் கான் | 02 | 00 | 21 | 00 |
| விஜயகாந்த் வியாஸ்காந்த் | 04 | 00 | 24 | 00 |
| டுனித் வெல்லாளகே | 04 | 00 | 18 | 01 |
