பங்காளதேஷ் டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் மிர்பூரில் நடைபெற்ற இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று 2-0 என தொடரை வெற்றி பெற்றது. இந்தியா அணி ஒரு நாள் சர்வதேச தொடரை இழந்திருந்தாலும் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றுக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் இன்னிங்சில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 73.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 227 ஓட்டங்களை பெற்றது. இதில் மொமினுள் ஹக் 84(157) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில்
உமேஷ் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும், ஜெய்தேவ் உனட்கட் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

முதல் இன்னிங்சில் துடுப்பாடிய இந்தியா அணி 86.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 314 ஓட்டங்களை பெற்றது. இதில் ரிஷாப் பான்ட் 93(104) ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 87(105) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசான், டைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும், டஸ்கின் அஹமட், மெஹிடி ஹசான் மிராஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 70.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றது. இதில் லிட்டன் டாஸ் 73(98) ஓட்டங்களையும், சகிர் ஹசான் 51(135) ஓட்டங்களையும், நுருல் ஹசான் 31(29) ஓட்டங்களையும், டஸ்கின் அஹமட் ஆட்டமிழக்காமல் 31(46) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அக்ஷர் படேல் 3 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின், மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஜெய்தேவ் உனட்கட், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றிக்கொண்டனர்.

145 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இந்தியா அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. பின்னர் அக்ஷர் படேல் நிதானமாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை அதிகரித்துக்கொடுத்தார். இந்தியா அணி 47 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது. இதில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆட்டமிழக்காமல் 42(62) ஓட்டங்களையும், அக்ஷர் படேல் 34(69) ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 29(46) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மெஹிடி ஹசான் மிராஸ் 5 விக்கெட்களையும், ஷகிப் அல் ஹசான் 2 விக்கெட்களையும் பெற்றனர்.

தடுமாறிய நிலையில் காணப்பட்ட இந்தியா அணியின் வெற்றியினை அஷ்வின், ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த போட்டியின் நாயகனாக ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் நாயகனாக செட்டேஷ்வர் புஜாரா தெரிவு செய்யப்பட்டார்.

வி. பிரவிக்
தரம் 04.

பங்காளதேஷ் டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

Social Share

Leave a Reply