முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று காலை அமெரிக்கா பயணமாகியுள்ளார். அவர் தனது மனைவி அனோமா ராஜபக்ஷ, மகன் மனோஜ் அவரின் மனைவி செவ்வந்தி மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரோடு அமெரிக்கா பயணித்துள்ளதாக விமான நிலைய தகவல்களை அடிப்படையாக வைத்து ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் போது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி, மாலைதீவுகள் சென்றார். அதன் பின்னர் சிங்கப்பூர் சென்று அங்கிருந்து தனது பதவி விலைகளை அறிவித்தார்.
பதவியினை இராஜினாமா செய்தன் பின்னர் அமெரிக்க செல்ல முயற்சித்த போதும் அமெரிக்கா செல்வதற்கான அனுமதி கிடைக்காத நிலையில், இந்தோனேசியா சென்று பின்னர் கடும் பாதுக்காப்புடன் நாடு திரும்பினார். நாடு திரும்பிய நிலையில் வெளியிடங்களுக்கு செல்லாத அவர் எந்தவித செயற்பாடுகளுமின்றி மௌனம் காத்திருந்தார். இவ்வாறன நிலையிலேயே அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
