மண்சரிவு எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 05 மாவட்டங்களின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மழை பெய்ய தொடங்கியதையடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நேற்றிரவு 9 மணி முதல் மீண்டும் நீடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி, துனுவில கணபதிவத்த பிரதேசத்தில் கடந்த 25ம் திகதி காலை பெய்த கடும் மழையின்போது வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

அந்த குடும்பத்தின் ஏனைய அங்கத்தினர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக ஏற்படும் இந்த இயற்கை அனர்த்தங்களின் இருந்து மக்கள் தங்களை காத்துகொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது.

மண்சரிவு எச்சரிக்கை!

Social Share

Leave a Reply