கஹட்டருப்ப பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹட்டருப்ப பதுளை வீதியில் அம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
கஹட்டருப்பையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் கஹட்டருப்பை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று சிறுமிகள் காயமடைந்து கந்தகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அதில் ஒரு சிறுமியே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் முத்துமாலை, கந்தகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 7 வயதுடைய சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டருப்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய காலமாக வீதி விபத்துகள் அதிகரித்துவரும் நிலையில், உங்கள் பயணங்களில் அதிக பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளுங்கள். நிதானமாக வாகனங்களை ஓட்டுங்கள், உங்கள் வேகம் மற்றுமொருவரின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும் என்பதில் அக்கறைகொள்ளுங்கள்.