இறக்குமதி செய்தால் 25 ருபாய் தான்!

முட்டையை இறக்குமதி செய்து 25 ரூபாவிற்கு வழங்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்து இந்த விலையில் வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.

சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் முட்டை விலை அதிகரித்துள்ளதாகவும், பாரிய அளவிலான முட்டை உற்பத்தி நிறுவனங்கள் செயற்கையாகவே முட்டை தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட முட்டை உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் குழு முட்டை உற்பத்தியில் இருந்து விலகியுள்ளதாகவும், முட்டை உற்பத்திச் செலவு அதிகரிப்பினால் பாரிய முட்டை உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தற்போது முட்டை விற்பனையில் பாரியளவில் இலாபம் ஈட்டி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முட்டை தட்டுப்பாடு மற்றும் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இறக்குமதி செய்வதை தவிர வேறு வழியில்லை என அகில இலங்கை வெதுப்பாக சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

 

இறக்குமதி செய்தால் 25 ருபாய் தான்!

Social Share

Leave a Reply