இலங்கையில் இரண்டு வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிதீவிரமாக அதிகரித்திருப்பதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகதின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம், டெங்கு ஆய்வு மையத்தின் பணிப்பாளரும், மருத்துவ விஞ்ஞானத் துறை பீடாதிபதியுமான பேராசிரியர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்.
கொரோனா தோற்று காலத்திற்கு முன்பிருந்தது போல, மீண்டும் அதிக டெங்கு தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
2022 ம் ஆண்டு முழுவதும், 70,000 க்கும் மேற்பட்ட டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர், எனவே இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நாட்களை பிரகடனப்படுத்தியுள்ளது.
அதன்படி, நேற்றும் (30.12) இன்றும் (31.12) டெங்கு நோயை தடுக்கும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.