கடந்த ஆண்டில் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர்!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, 2022 இல் இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 719,978 ஆக பதிவாகியுள்ளது.

இந்த தரவுகளின்படி கடந்த மாதத்தில் 91,961 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவிலிருந்து 19,963 சுற்றுலாப் பயணிகளும் இந்தியாவிலிருந்து 17,350 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு முழுவதிலும் 123,004 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து மட்டும் இலங்கை வந்துள்ளதாக தரவுகளில் பதிவாகியுள்ளது.

இலங்கை சுற்றுலா துறை கடந்த ஆண்டு 08 இலட்சம் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்திருந்தது. அதனடிப்படையில் ஆண்டு முழுவதும் 719,978 சுற்றுலாப் பயணிகளின் நாட்டை வந்தடைந்துள்ளார்.

 

கடந்த ஆண்டில் 7  லட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர்!

Social Share

Leave a Reply