இந்தியா, மும்பை வங்கடே மைதானத்தில் ஆரம்பித்த இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான 20-20 தொடரின் முதற் போட்டியில் இந்தியா அணி 02 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலிற் துடுப்பாடிய இந்தியா அணி மூன்று விக்கெட்களை வேகமாக இழந்தது தடுமாறியது. இஷான் கிஷன் நிதானமான ஆரம்பம் ஒன்றை வழங்கினார். அவர்37(29) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். அதன் பின்னர் மத்திய வரிசை வீரர்கள் நிதானமாக அடித்தாடி இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர். அணியின் தலைவர் ஹார்டிக் பாண்ட்யா 29(27) ஓட்டங்களை நிதானமாக பெற்றுக் கொடுத்தார். தீபக் ஹுடா, அக்ஷர் பட்டேல் ஜோடி 68 ஓட்டங்களை 35 பந்துகளில் அதிரடியாக ஆட்டமிழக்கமால் பகிர்ந்தனர். ஹுடா 41(23) ஒட்டங்களையும், பட்டேல் 31(23) ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். இவ்வாறான நிலையில் தனஞ்சய டி சில்வாவுக்கு ஒரு ஓவர் மாத்திரமே வழங்கப்பட்டது. 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை அவர் கைப்பற்றினார். வனிந்து ஹசரங்க(22/1), மகேஷ் தீக்ஷண(29/1), டில்ஷான் மதுசங்க(35/1), சாமிக்க கருணாரட்ன(22/1) ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்தியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியும் இந்தியா அணி போன்று ஆரம்பத்தில் முக்கிய விக்கெட்களை இழந்தது. குஷல் மென்டிஸ் நிதானமாக துடுப்பாடி 28(25) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். வனிந்து ஹசரங்க, தஸூன் சாணக்க ஜோடி அதிரடியாக அடித்தாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்திய வேளையில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வனிந்து 21(13) ஓட்டங்களையும், தஸூன் சாணக்க 45(27) ஓட்டங்களையும் பெற்றனர். இதன் பின்னர் வாய்ப்புகள் இந்தியா பக்கமாக மாறியது. இருப்பினும் வழமை போன்ற சாமிக்க கருணாரட்ன தனித்து நின்று போராடினர். இறுதி இரு ஓவர்ககளில் அதிரடி நிகழ்த்தி 16 பந்துகளில் 23 ஓட்டங்களை பெற்று கொடுத்தார். இருப்பினும் வெற்றியிலக்கை தொட முடியவில்லை.
நுட்பமாக ஓட்ட இலக்கினை குறி வைத்து, எதிரணியின் பந்துவீச்சாளர்களையும் சரியாக இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்கள் கணிக்க தவறியமை இந்த தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
இந்தியா அணியின் பந்துவீச்சில் தனது முதற் போட்டியில் விளையாடிய ஷிவம் மாவி 04 விக்கெட்களை(22) கைப்பற்றினார். உம்ரன் மாலிக்(23), ஹர்ஷால் பட்டேல்(41) ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்களை கைப்பற்றினர்கள்.
போராடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இரு அணிகளுக்குமிடையிலான அடுத்த போட்டி 05 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
