முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மனைவி அயோமா ராஜபக்ஷ டுபாயில் இருந்து இன்று (05.01) காலை நாடு திரும்பியுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் விமான நிலைய குடிவரவு திணைக்களத்தின் பேச்சாளர் இவர்களின் வரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இன்று காலை 08.25 மணியளவில் Emirates Airlines விமான நிறுவனத்துக்கு சொந்தமான EK-650 விமானத்தில் இவர்கள் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய, அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகள் அனைவரும் கடந்த மதம் 26ம் திகதி டுபாய் சென்றிருந்ததுடன் அந்நாட்டின் பல இடங்களுக்குக்கும் பூங்காக்களுக்கும் சென்று பார்வையிட்டிருந்தனர். அவர்களது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.




