ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் திருட்டு!

ட்விட்டர் தரவு அமைப்பு மீதான சைபர் தாக்குதல் காரணமாக, சுமார் 200 மில்லியன் ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சைபர் தாக்குதலை நடத்திய ஹேக்கர்கள் கிட்டத்தட்ட 200 மில்லியன் ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை இணையத்தில் வெளியிட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் ட்விட்டர் நிறுவனம் எந்த அறிக்கையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பற்றிய எதுவித அறிவிப்பையும் விடுக்கவில்லை.

 

ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் திருட்டு!

Social Share

Leave a Reply